About Us
என் வாழ்க்கையில் நான் அனுபவித்த வழிகள் வேதனைகள் எல்லாம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னை சுற்றி நடக்கும் எல்லா பிரச்சனைகளும் எனக்கு எதிராக இருக்கும். நான் நல்லதே செய்தாலும் அது குற்றமாக தான் என்ன படுவார்கள் என் உடன் பிறந்தவர்கள் மற்றும் என்னை பெற்றெடுத்த அவர்களும் புரிந்து கொள்வது இல்லை.
எப்பவுமே இப்படித்தான் இருக்கணும் என்றெல்லாம் ஒரு கட்டளை இடுவார்கள் எனக்கென்று ஒரு சுதந்திரம் இல்லை என் வாழ்க்கையில் சந்தோஷம் என்றும் இருந்ததே இல்லை அப்படி நான் கொஞ்சம் சந்தோஷம் பட்டால் அதிக நேரம் அழ வேண்டி இருக்கும் இப்படித்தான் என் வாழ்க்கை என்னை புரிந்த நண்பர்கள் உறவினர்கள் அன்பாக இருந்தாலும் அது எனக்கு நிலைக்காது.
இந்த பூமியில் ஊனமாக பிறந்தால் எல்லா துன்ப துயரங்கள் கஷ்டம் வேதனைகள் அனுபவிக்கத்தான் வேண்டும் நன்றாக பிறந்தால் நாம் நம் வேலைகளை தாமாகவே செய்து கொள்ள முடியும் எனவே பிறரின் உதவியினால் தான் வாழ முடியும் என்று தெரிந்தும் அவர்கள் நம்மை புரிந்து கொள்வதில்லை அதுதான் வாழ்க்கையில் அதிக வேதனையை அளிக்கிறது
இந்த உலகத்தில் ஊனமாக பிறப்பது அவ்வளவு குற்றமா? நாங்களும் மனிதர்கள் தானே? எங்களை ஏன் இந்த உலகம் வேற்றுமையாக பார்க்கிறது.
கை கால் இல்லை என்றால் இந்த உலகத்தில் வாழ கூடாதா அப்படி வாழ்ந்தால் எங்களுக்கு இந்த மாதிரியான துன்பங்கள் தான் வருமா? எங்கள் வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இருக்க கூடாதா ஏன் இந்த வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க எங்களுக்கு சுகந்திரம் இல்லையா மற்றவர்களை நினைத்து பயந்து தான் வாழ வேண்டுமா எங்களுக்கு என்று சந்தோஷம் அன்பே அரவணைப்பு கிடைக்க கூடாதா நல்ல உள்ளங்கள்