பார்வையற்றவர்களுக்கு நாங்கள் செய்யும் உதவிகள்

பார்வையற்றவர்களுக்கு நாங்கள் செய்யும் உதவிகள்

பார்வையற்றவர்களுக்கு நாங்கள் செய்யும் உதவிகள்

  1. சுரேஷ் என்ற பார்வையற்ற சகோதரனுக்கு நடக்க முடியாத காரணத்தால் நரம்பு பிரச்சனை இருக்கின்ற காரணத்தால் எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்க பண உதவி செய்தோம்
  2. அருள்மணி என்ற பார்வையற்ற சகோதரியின் மகள் சிவகாமிக்கு காலேஜ் எக்ஸாம் பீஸ் கட்டுவதற்கு உதவி செய்தோம்
  3. வாசுகி என்ற சகோதரிக்கு பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்தவர்கள் கவனிக்காத காரணத்தால் மாதம் சாப்பாட்டிற்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம்

4 செந்தில்குமார் என்ற பார்வையற்ற சகோதரனுடைய மகள்கள் படிப்பு செலவிற்காக நோட்ஸ் புத்தகம் ஸ்கூல் பேக்ஸ் போன்றவைகள் வாங்கிக் கொடுத்தோம்

5 பிரகாஷ் என்கின்ற பார்வையற்ற சகோதரனுக்கு வியாபாரம் செய்வதற்கு ஊதுபத்தி மற்றும் வாசனைப் பொருட்கள் வாங்கிக் கொடுத்தோம்

6 பெருமாள் என்ற பார்வையற்ற சகோதரனுக்கு வியாபாரம் செய்வதற்கு சோப்பு ஆயில் பினாயில் சோப்பு பவுடர் ஊதுபத்தி மற்றும் ப்ளீச்சிங் பவுடர் போன்றவைகள் வாங்கிக் கொடுத்தோம்

இச்ச சகோதரனுக்கு திருமணம் செய்து வைத்தோம்

7 பாலாஜி என்ற பார்வையற்ற சகோதரனின் தாயார் மரித்து விட்டார்கள் அவர்களுடைய நல்லடக்கம் நாங்கள் முழுமையாக பொறுப்பேற்று அடக்கம் செய்தோம்
[11:18 AM, 3/25/2023] Jayakumar: 15.5.2019 பத்து பார்வையற்ற சகோதர சகோதரிகளுக்கு 500 ரூபாய் மதிப்பில் மளிகை பொருட்கள் கொடுக்கப்பட்டது

23.6.2019 பி சி ஐ திருச்சபை சித்தோட்டில் போதகர் தாவீது ராஜா அவர்கள் தலைமையில் 15 மாணவ மாணவிகளுக்கு கூல் பேக்ஸ் கொடுக்கப்பட்டது

30.6.2019 ஈரோடு செங்குந்தர் மழலையர் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடத்தி 15 குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் அரசு அதிகாரிகள் மூலம்

22.10.2019 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு பார்வையற்றவர்களுக்கு விழிப்புணர்வு நடைபயணம் காவல்துறை துணை ஆய்வாளர் திரு ரவி அவர்கள் குட்டி அசைத்து துவக்கி வைத்தார்கள் இதில் அரிமா சங்கத் தலைவர் பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் நடிகர் விஜய் ரசிகர் மன்றம் கலந்து கொண்டார்கள். மாற்றுத்திறனாளிகள் இளையோர் நல முன்னேற்ற சங்கம் ஈரோடு மற்றும் சிலம்பம் விளையாடும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டார்கள் 12 மணியளவில் ஊர்வலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடிந்தது பின்னர் சிலேட்டர் நகர் சிஎஸ்ஐ தேவாலயத்தில் தன்னம்பிக்கை குறித்து சகோதரி எப்சி பேசினார்கள் அரசன் கண் மருத்துவமனை ஈரோடு டாக்டர் மலர்விழி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் இறுதியில் விஜயன் ஆயர் அவர்கள் பிரார்த்தனை ஏறெடுத்து கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இந்நாளில் 20 பார்வையற்ற குடும்பங்களுக்கு ரூபாய் 500 மதிப்பு மளிகை பொருட்கள் உணவு கொடுக்கப்பட்டது

14.12.2019 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு பார்வையற்றவர்களுக்கான கிறிஸ்துமஸ் Rev. விஜயன் ஆயர் துவக்கி வைத்தார் 80 பார்வையற்றவர்கள் மற்றும் 20 மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கு ஒரு லிட்டர் சில்வர் வாட்டர் பாட்டில் டவல் அரை கிலோ மிச்சர் டி கே மற்றும் சிறப்பான உணவு கொடுக்கப்பட்டது

21.12.2019 அன்று நோபில் ஹாட்ஸ் அரிமா சங்கம் கோவை திரு வெங்கடேஷ் அவர்கள் பார்வையற்ற குடும்பங்களுக்கு 500 மதிப்பெண் மளிகை பொருட்கள் கொடுத்தார்கள்

22.12.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11 30 மணிக்கு சி எஸ் ஐ பப்ளி ஆலயம் விஜய் அமங்கலம் 15 பார்வையற்றவர்களுக்கு 500 ரூபாய் மதிப்பில் மளிகை பொருட்கள் கொடுத்தார்கள் பாஸ்டர் டேவிட் ஜெயசீலன் மற்றும் கமிட்டி யார் அங்கத்தினர்கள் வாலிபர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்

25.1.2020 ஹெலன் கெல்லர் மெமோரியல் வாலிபால் போட்டியானது ஸ்ரீ ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் காலேஜ் சென்னிமலை நடத்தப்பட்டது இதில் ஈரோடு தஞ்சாவூர் விழுப்புரம் ஊட்டி கரூர் வேலூர் போன்ற அணிகள் கலந்து கொண்டது இந்தப் பார்வையற்றோருக்கான வாலிபால் போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 5000 மற்றும் கோப்பை இரண்டாம் பரிசு நான்காயிரம் மற்றும் கோப்பை மூன்றாம் பரிசு 3 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பை தோல்வி அடைந்த மற்ற மூன்று அணிகளுக்கும் ஆறுதல் பரிசாக ரூபாய் ஆயிரம் கொடுக்கப்பட்டது அனைத்து அணி வீரர்களுக்கும் சான்றிதழ் கொடுக்கப்பட்டது இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு மக்கள் ராஜன் அவர்கள் கலந்து கொண்டார்கள்

One thought on “பார்வையற்றவர்களுக்கு நாங்கள் செய்யும் உதவிகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *